டீசல் விலை தொடர்பில் இலங்கை வாழ் மக்களுக்கு வெளியான செய்தி.!
மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான இராணுவ பதற்றம் காரணமாக உலக சந்தையில் டீசல் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் தற்போதைய எரிபொருள் விலைச் சூத்திரம் மற்றும் வரி விகிதங்களின் அடிப்படையில், உள்நாட்டு சந்தையில் ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலை 515 முதல் 530 ரூபாய் வரை உயரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹவுதி போராளிகள் பாப் அல்-மந்தப் நீரிணை பகுதியில் தங்களது கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருவதால், கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச டீசல் விலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை தனது டீசல் இறக்குமதிக்கான விலையை கணக்கிடுவதில் அடிப்படையாகக் கொள்ளும் சிங்கப்பூர் Platts சந்தையில், ஒரு பீப்பாய் டீசலின் விலை முன்னர் சுமார் 90 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், தற்போது சுமார் 100 வீதம் அதிகரித்து 180.60 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.





