வங்கி கடன் அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை..!!
E
Editorடிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வளர்ச்சியுடன் தொடர்புடைய இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் நிதித்தகவல்களை பாதுகாக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்களிடம் கவனக்குறைவை பயன்படுத்தி ஹேக்கர்கள் பணத்தை திருடக்கூடும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இதன்படி, பொதுமக்கள் இரகசிய தன்மையை பேணுமாறும், வங்கி கணக்கின் இரகசிய எண்கள், வங்கி கடவுச்சொற்கள் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை (OTPs) குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உட்பட யாருடனும் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைபேசிகளில் பெறப்பட்ட OTP எண்களை வெளியாட்களுக்கு வெளியிட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அட்டை பயன்பாட்டை கண்காணிக்கவும்: பரிவர்த்தனைகள் உங்கள் முன்னிலையில் செய்யப்படுவதை உறுதி செய்யுங்கள் மற்றும் கடைகள் அல்லது உணவகங்களில் அட்டைகள் எடுத்துச்செல்லப்படுவதைத் தவிர்க்கவும்.
Tags:Local





